தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகி, பாலிவுட் வரை வெயிட்டாக ஒரு ரவுண்டு வந்தவர் இலியானா. இடுப்பழகி என செல்லமாக அழைக் கப்பட்ட இவர், கவர்ச்சியில் ஒருபோதும் பஞ்சம் வைத்ததில்லை. சமீபகாலமாக தன் காதலனுடன் ஊர் ஊராகச் சுற்றி, அங்கெல்லாம் எடுத்த பிகினி படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவந்த இலியானா, டயட்டில் ரொம்பவே மெத்தனமாக இருந்துவிட்டார்.

Advertisment

ee

இதன்பலனாக ஒல்லி பெல்லியாக இருந்த இலியானா, அளவுக்கதிகமாக எடையைக் கூட்டினார். இதன்காரணமாக பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது.

காலப்போக்கில் காதலனும் கழற்றிவிட, தனிமரமாக நின்ற இலியானா தற்போது பிட்னஸ் ஸில் கவனம் செலுத்தி மீண்டும் பழைய தோற்றத்தை அடைய முயற்சித்திருக்கிறார்.

அப்படி குறைத்த இடுப்பை பெல்லி டான்ஸ் ஆடுவதுபோல குதூகலமாக ஆட்டி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கி றார் இலியானா. என்னாலையும் பெல்லி டான்ஸ் ஆடமுடியும் என்று காட்டுவதற்கா அல்லது வெயிட்டைக் குறைச்சிட்டேன், சான்ஸ் குடுங்களேன் என்று கேட்பதற்கா? எதற்காக இந்த வீடியோ என்பது இலியானாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.